அஜித் ரசிகர்கள் இப்போதெல்லாம் பல சமூக வேலைகளிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்கின்றனர். முதியோர் இல்லங்களுக்கு உதவி, ஆதரவற்றோருக்கு உணவு, பள்ளிக்குழந்தைகளுக்கு புத்தகங்கள் என தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது, அதிக அளவில் நிலத்தடிநீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி வீழ்த்துவதில் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர்.

குறிப்பாக சமீபத்தில் மதுரையை சேர்ந்த தல அஜித் ரசிகர்கள் அப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஈடுபட்டனர்.

நேற்று மதுரையில் வேலம்மாள் கல்லூரி அருகில் உள்ள பனையூர் என்ற பகுதியில் இந்த பணியில் ஈடுபட்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.

பொன் விலையையும் பூமியின் நீரை ஓட்டு மொத்தமாக உறிஞ்சி, தண்ணீர் இல்லாத காடாய் மாற்றி வரும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் அஜித் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளது போல….

பலரும் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கருவேல மரங்களை வெட்டும் பணியை செய்தால் விரைவில் நம்முடைய நாடு தண்ணீர் பிரச்சனையில் இருந்துவிடுபடும்.