தல ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் இது ஊர் அறிந்த செய்தி அதிலும் தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் அஜித்தை தனது குடும்பத்தில் ஒருவராக பார்ப்பவரும் உண்டு. அஜித் தற்பொழுது விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் படத்தின் வேலைகள் மிக பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

ajithvisuvasam

அஜித்தின் ரசிகர்கள் சிலர் அஜித் பெயரை உபோயகபடுத்தி பல நல்ல நற்பணிகளை செய்து வருகிறார்கள் ஆனால் இன்னும் சில ரசிகர்கள் தல-க்காக என்னவேனாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள், சில ரசிகர்கள் அஜித்தை கடவுளாக கட்டவுட் வைப்பது உடம்பில் கைகளில் பச்சை குத்திகொல்வது சில ரசிகர்கள் அஜித் உருவ ஹேர் ஸ்டைல் வெட்டி கொள்வார்கள். இப்படி அஜித்தின் மீது வெறித்தனமான பாசத்தை வைத்துள்ளார்கள்.

thala
thala

இன்று ஒரு ரசிகர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் அதில் ஒரு ரசிகர் தனது கழுத்தில் தல என்ற பெயரை பச்சை குத்தியுள்ளார் இது எவ்வளவு ஆபத்தான செயலாக இருக்கிறது, இது மாதிரி செயலை தல அஜித் செய்யகூடாது என கூறியிருந்தார் ஆனால் அதையும் மீறி அஜித் மீது வெறித்தனமான பாசத்தில் இப்படி செய்துள்ளது அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது. இதனால் சக அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

அஜித் இதற்க்கு முன் கூறியதாவது:

Ajith-Kumar

“முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள், என் படம் பிடித்தால் பாருங்கள், நேரத்தை வீணடிக்காதீர்கள். நல்ல நற்பணிகளை மக்களுக்காக செய்யுங்கள், என் பெயரை உபயோகப்படுத்தி சில கெட்ட விஷயங்களை செய்யாதீர்கள் என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

இப்படி கூறியும் இவ்வாறு இவர் செய்திருப்பது பார்ப்பதற்கு வருத்தமான விஷயமாக இருக்கிறது. இவருக்கு நல்ல அறிவுரையை இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தான் கூற வேண்டும்.