Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் கை அசைத்ததற்க்கே இப்படியா.! உண்மையை சொன்ன இரண்டு பிரபலங்கள்.!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் அதுவும் ரசிகர் மன்றமே இல்லாமல், ரசிகர் மன்றத்தை எடுத்தாலும் இன்னும் அவரது ரசிகர்கள் விஸ்வாசமாக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அஜீத் சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார், படத்தின் டைட்டில் விஸ்வாசம் என வைத்துள்ளார்கள் படபிடிப்பு மிக விரைவாக நடைபெற்று வருகிறது பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.
அஜித்தை பற்றி அஜித்தின் ரசிகர்கள் பற்றியும் 2 பிரபலங்கள் சொன்ன விஷயம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அருண்விஜய் நடித்து இருந்தார், அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்தை பற்றியும் அஜித் ரசிகர்கள் பற்றியும் கூறியுள்ளார், இதில் அவர் கூறியதாவது அதாரு அதாரு பாடலை ஒரு கம்பெனி முன் இரவில் நடத்தினோம், அஜித்தின் ரசிகர்கள் அஜித்தை பார்த்தவுடன் அப்படியே கத்தினார்கள் ஆனால் தல கையை அசைத்து அமைதியாக செல்லுங்கள் என சொன்னதும் உடனே ரசிகர்கள் கூட்டத்தைக் கலைத்து விட்டார்கள்.
அதேபோல் நடிகர் தம்பி ராமையா ஒரு பேட்டியில் அஜித்தின் ரசிகர் பற்றி கூறியுள்ளார் வீட்டு மாடியில் நின்று அதிக நேரம் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்களை பார்த்து கையை ஆட்டிவிட்டு, அனைவரும் அமைதியாக செல்லுங்கள் எனக் கூறினார் உடனே ரசிகர்கள் அனைவரும் அமைதியாக சென்றுவிட்டார்கள்.அஜித்தின் கை அசைவிற்கே ரசிகர் இப்படி ஒரு மரியாதை கொடுக்கிறார்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
