விஜய்யின் பைரவா வெற்றி பெற வாழ்த்தி தல ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.
அஜீத்தும், விஜய்யும் அண்ணன் தம்பி போன்று பழகினாலும் அவரது ரசிகர்கள் எப்பொழுது பார்த்தாலும் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள். சண்டை போட்டு ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்டாக்கிவிட்ட சாதனையாளர்கள் நம் தல, தளபதி ரசிகர்கள்.

அவர்களின் சண்டை ஹேஷ்டேக்கின் அர்த்தம் புரியாத வெளிநாட்டவர்கள் அதற்கு அர்த்தம் கேட்டு ட்வீட்டிய கொடுமை எல்லாம் நடந்துள்ளது. இப்படி அடித்துக் கொண்டிருப்பவர்கள் அவ்வப்போது பாசமும் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பார்கள்.

அப்படிப்பட்ட அரிய சம்பவம் நடந்துள்ளது. விஜய்யின் பைரவாவுக்கு தல ரசிகர்கள் மெகா பேனர் வைத்துள்ளனர். மேலும் ட்விட்டரிலும் பைரவாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.