Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-fans-club-started

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் ரசிகர் மன்றங்களை திறக்கும் அஜித்.. வெறித்தனமாகும் தல ரசிகர்கள்

நடிகர் அஜித் சில வருடங்களுக்கு முன்பு ரசிகர் மன்றத்தை கலைத்தார். அஜித் அப்பவே என் ரசிகர்கள் அவர்களது பெற்றோர்களையும், குடும்பத்தினரையும் முதலில் மட்டுமே பார்க்க வேண்டும். அதற்கு பிறகு மட்டுமே நடிகர்கள் சினிமாவை பார்க்க வேண்டும் என்று கருதினார்.

ஆனால் தற்பொழுது ஒரு சில சம்பவங்களால் அஜீத் மீண்டும் ரசிகர் மன்றத்தை திறக்கப் போகிறார் என்று செய்திகள் வந்துள்ளது. அதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டிற்கு செல்லும் பொழுது அதனை பார்த்ததை இரண்டு ரசிகர்கள் அஜித்தை விடாமல் துரத்தி வண்டியில் ஓட்டி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் கீழே விழ அஜித் அவர்களை பார்த்து அறிவுரை கூறி அனுப்பியுள்ளார்.

அவர்களுக்கு இரண்டு கால்களிலும் இரத்தம் வந்துள்ளது. அதெல்லாம் கண்டுகொள்ளாமல் அஜித்தை பார்த்துவிட்டு கொண்டாடியுள்ளனர். இதனால் வருத்தப்பட்ட அஜித் அவர்கள் திரும்பிப் போகும் பொழுது இதுபற்றி மேனேஜரிடம் பேசியுள்ளார். அவர்கள் அடிபட்டு கவலைப்படாமல் நம் மேல் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் இப்படியே இதனை விடக் கூடாது. கண்டிப்பாக ஏதாவது ஒரு செயல் பண்ண வேண்டும். மீண்டும் ரசிகர் மன்றம் தொடங்குவது பற்றி பேசி இருக்கிறாராம்.

அதனால் அஜித் மீண்டும் ரசிகர் மன்றம் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அப்படித் இருக்கும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் திறக்கப்படும். லட்சகணக்கான  ரசிகர்களின் நற்செயல்கள் செய்யப்படும். ஏற்கனவே பல உலக சாதனை படைத்த அஜித் ரசிகர்கள் இதில் சும்மா விடுவார்களா?

அது ரசிகர் மன்றமாக இருக்குமா அல்லது நற்பணி மன்றமாக இருக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். ரொம்ப நாள் அமைதி காத்து அஜித் தற்பொழுது மீண்டும் ரசிகர்கள் மீது கவலை கொண்டுள்ளார் என்று கூறுகிறார்கள் பொருத்திருந்து பார்க்கலாம்.

மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கும் பிரபலம்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top