‘விவேகம்’ படம் வெளிவந்து பல கலவையான விமர்சனங்களை சந்தித்தது. சினிமா பிரபலங்கள் சிலர் எதிர்மறை விமர்சனங்கள் சொன்னவர்களை எதிர்த்து விமர்சனம் செய்தனர்.

உலகம் முழுவதும் வெளிவந்த இந்தப் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வசூல்மழை தான்.

விவேகம்’ படம் படு வேகமாக வசூலில் மாஸ் காட்டி வந்தது. எந்தப் படமும் செய்யாத சாதனையாக முதல் வாரத்தில் ரூபாய் 5.75 கோடியைச் சென்னையில் மட்டும் வசூலித்துள்ளது.ஆனாலும் ரசிகர்களுக்கு ஒரு சின்ன வருத்தம் உண்டு என்ன என்று பார்ப்போமா.

ajith vivegam
ajith vivegam

அஜித் தமிழ் சினிமாவை ஆளும் ஒரு உச்ச நட்சத்திரம். படத்தின் இயக்குனர் யார், நடிகை யார், இசையமைப்பாளர் யார்? என்று எதிர்ப்பார்க்காமல் அஜித் என்ற தனிமனிதனுக்காக கூடும் கூட்டத்திற்கு அளவே இல்லை.

அந்த அளவிற்கு அஜித் திரையில் வந்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் ரசிகர்களை கூட ஒரு செய்தி புலம்பவிட்டது. அது வேறு ஒன்றுமில்லை அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் தான் மீண்டும் நடிக்கப்போகின்றார் என்பது தான் அந்த செய்தி.

vivegam

இதை என்னை அறிந்தால், வேதாளம் தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவே உறுதிப்படுத்தினார், பல அஜித் ரசிகர்களும் சிவாவுடன் படம் இணைந்து செய்வது எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால், தொடர்ந்து அவருடனே கூட்டணி வைப்பது எங்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்துள்ளது, மேலும், அஜித் தொடர்ந்து மசாலா படங்களில் தான் நடித்து வருகின்றார்.

vivegam

அவர் என்னை அறிந்தால் போல் நடிக்க வேண்டும், பல இயக்குனர்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம், இதெல்லாம் அஜித் காதிற்கு செல்லுமா என்று தெரியவில்லை.

இவை எங்கள் ஆதங்கம், மேலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போர் அடித்து விட்டது, மாற்றம் தேவை என பல அஜித் ரசிகர்கள் நேற்று டுவிட்டரில் கூறி வந்தனர். இதுமட்டுமின்றி சிவாவுடன் அஜித் 10 படங்கள் கூட இணைந்து பணியாற்றட்டும், ஆனால், ஒரு படம் இடைவேளி வேண்டும் என்றும் கூறினர்.

அது சரி என்ன தான் ரசிகர்கள் சொன்னாலும், அதை கேட்கும் மனநிலையில் அஜித் இருப்பாரா? ஏனெனில் அவர் எடுப்பது தானே கடைசி முடிவு.