தமிழ் சினிமாவில் தல என்று அனைவராலும் சொல்லப்படும் நடிகர் அஜித். சிவா கூட்டணியில் இது ஹாட்ரிக்காக வெளிவந்துள்ளது விவேகம். பல முக்கிய இடங்களில் உள்ள தியேட்டர்களில் மூன்று நாட்களுக்கு டிக்கெட் இல்லை என்ற போது ரசிகர்களின் ஆர்வத்திற்கு குறைவில்லை.

ஆனால பல ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். டிக்கெட் கிடைக்கவில்லை என ஒரு சிலர் புலம்ப, சிலர் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் கூறியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு திரையரங்கின் வெளியே இரண்டு நபர்கள் முன்பதிவு என்று சொல்லி டிக்கெட்டை ரூ 280 க்கு விற்றுவருவதாக மாவட்ட நிர்வாகத்தில் ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும் நெல்லையில் உள்ள ராம் திரையரங்கில் காலை 4 மணிக்கு ரசிகர் மன்ற சிறப்பு காட்சியாக விவேகம் திரைப்படம் அறிவிக்கப்பட்டடிருந்தது.ஆனால் லைசன்ஸ் வர தாமதமானதால் ரசிகர்கள் திரையரங்கு உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். பின் அது மோதலாகி ரசிகர்கள் திரையரங்கு கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.