அஜித் கேரியரில் மறக்க முடியாத படங்களில் ஒன்று அமர்க்களம். காரணம், இது மெகா ஹிட் படம் என்பதனால் மட்டுமல்ல அஜித்தும் ஷாலினியும் நண்பர்களாகி பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டது இந்த படத்தினால்தான்.

இந்நிலையில் இன்றுடன் இப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை அஜித் ரசிகர்கள் #17YrsOfMegaHitAmarkalam எனும் ஹேஷ் டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.