Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் காலில் விழுந்து வணங்கியதாக பொய் செய்தி பரப்பிய நடிகர்.. வெளுத்து வாங்கிய பிரபலம்! அம்பலமான உண்மை!
நீண்ட காலமாகவே தல அஜித்தை பற்றிய வதந்திகள் தமிழ் சினிமாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அஜித் செய்யாத ஒன்றை செய்ததாக கூறி வருவதற்கு என்றே ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
தல அஜித் ஒரு நல்ல மனிதர். தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர். எந்த ஒரு விஷயத்திலும் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால் அவருக்கு நல்லது செய்கிறேன் என்ற பெயரில் அவர் செய்யாத பல விஷயங்களை செய்ததாக கூறி பல பிரச்சினைகளில் இழுத்து விட்டு விடுகிறார்கள் ஒரு சிலர். அந்த உண்மை தான் தற்போது அம்பலமாகியுள்ளது.
தல அஜித் ஒரு கார், பைக் ரேஸர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் பைக் ரேஸில் அவ்வபோது கலந்து கொண்டவர்தான் பெண் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா. இவர்தான் இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரும் அஜித்தும் பைக் ரேஸ் பண்ணும்போது மட்டுமே பேசிக் கொள்வார்களாம். ஆனால் அதன்பிறகு அவ்வளவாக இருவருக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. சமீபத்தில் அலிஷா அப்துல்லாவுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதவியை பெற்றதும் நேரடியாக தல அஜித்தை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றதாக பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனது ஊடக நிறுவனத்தின் வழியில் தெரிவித்துள்ளார்.
இதைப்பார்த்து டென்ஷனான அலிஷா அப்துல்லா இதெல்லாம் பொய்யான செய்தி என மூஞ்சிக்கு நேராக சொல்லிவிட்டார். டுவிட்டர் வாயிலாக அவர் அப்படி தெரிவித்தது மற்ற ரசிகர்களுக்கு குசியாகி அதை வேகமாக பரவி வருவதால் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

alisha-abdhulla-tweet
