அஜித் இன்று தமிழகமே கொண்டாடும் நடிகர். ஆனால், அவர் இந்த இடத்தை அடைய பல தடைகளை தாண்டி வந்தவர்.

அஜித்தை பற்றி சமீபத்தில் ரமேஷ்கண்ணா,ஒளிபதிவாளர் சந்தோஷ் சிவன் சில தகவல்கள்களை பகிர்ந்ததை நம் தளத்திலே பார்த்தோம்.

தற்போது அஜித்தை வைத்து ‘பகைவன்’ படத்தை இயக்கிய ரமேஷ் பாலகிருஷ்ணா ஒரு சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது,

அதிகம் படித்தவை:  11ம் தேதி சோசியல் மீடியா அதிர போகிறது.... ஐயம் வெயிட்டிங் இயக்குனர் சமுத்திரகனி...

பகைவன் படம் எடுக்கும் போது அஜித்திற்கு இளம் வயது,நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர்,வெளிப்படையான பேசுவார்,வேளையில் முழு அர்பணிப்பையும் காற்றுவார்.

அப்போது காதல் மன்னன் படபிடிப்பில் இருந்தார்.காலையில் பகைவன் படபிடிப்பை முடித்துவிட்டு இரவில் காதல் மன்னன் படப்பிடிபிற்கு செல்வார்.அப்போது பகைவன் படத்திற்காக பாடல் காட்சி எடுத்து கொண்டிருந்தோம்.திடிரென அஜித் மயங்கி கீழே விழுந்துவிட்டார்,உடனே ஷூட்டிங்கை நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்தோம்,ஆனால் அஜித் 5 நிமிடம் ஓய்வு எடுத்துவிட்டு ஷூட்டிங்கை தொடரலாம் என்று சொல்லி முடித்து கொடுத்து விட்டார்.இது எனக்கு  மறக்கமுடியாத நினைவாகும்’ என்றார்.