Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்ன வேலை இருந்தாலும், இதை மட்டும் மறக்காமல் செய்வாராம் அஜித்
தமிழ் சினிமாவின் தல எனப் புகழப்படும் அஜித் தனது மனைவிக்காக செய்யும் ஒரு ஸ்பெஷலான விஷயம் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அஜித் என்ற ஒற்றை வார்த்தைக்கு அவரின் ரசிகர்கள் மகுடிக்கு மயங்குவது போலவே மயங்குவர். எந்தவித பின்னணியும் இல்லாமல் தனி ஆளாக தமிழ் சினிமாவில் கால் பதித்தவருக்கு இன்று பட்டி தொட்டியெல்லாம் படைகள். அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்த ஷாலினி மீது காதல் மலர்ந்தது. ஏப்ரல் 24, 2000ம் ஆண்டு ஷாலினியை அஜித் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு அஜித்தின் தன்னம்பிக்கையாகவும், வெற்றியாகவும் இருந்தவர் ஷாலினி தான். குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையாக மாறிய ஷாலினி அஜித்திற்காக அந்த வாழ்க்கையை முற்றிலும் மறந்தார். முழு நேர குடும்ப பெண்ணாக மாறினார். ஒரு சமயத்தில், அஜித் கார் ரேஸில் வெறி கொண்டு இருந்தார். சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் சொந்த பணத்தை போட்டு ரேஸில் கலந்து கொண்டார். நண்பர்கள் உதவி இல்லை. சம்பள பாக்கி திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டது. வாழ்க்கை அவரை புரட்டி போட்டது. அப்போது, மனைவி ஷாலினியின் ஊக்கமும் உறுதுணையும்தான் அஜித் மீள்வதற்கு வழிவகுத்தது.
ஷாலினி தான் அஜித்திற்கு பல நல்ல பழக்கங்களை கற்று கொடுத்து இருக்கிறார். எப்போதுமே கவலைப்படாமல் இருங்கள். உழைப்பு உண்மை என்றால் உங்களை தேடி வரும் என சொல்லிக்கொண்டே இருந்தாராம். அதன்பிறகே, புகழ் வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியே இருக்க தொடங்கினார் அஜித்.
இத்தனை அழகாக தன்னை பார்த்து கொள்ளும் மனைவியை, என்றுமே அஜித் விட்டு கொடுத்தது இல்லையாம். வெளியூர் படப்பிடிப்போ, வெளிநாடு படப்பிடிப்போ வீட்டில் நடக்கும் விஷயங்களை அடிக்கடி கால் செய்து கேட்டுக்கொள்வாராம். அதுமட்டுமல்லாது, தன் ஒவ்வொரு கால்களை முடிக்கும் போதும், மனைவிக்கு ஐ லவ் யூ சொல்வதை தனது வழக்கமாகவே கொண்டு இருக்கிறார். 18 வருடங்களை தாண்டியும் அவர்கள் இன்னும் காதலர்கள் தான் நெருங்கிய வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது.
