fbpx
Connect with us

Cinemapettai

வேணும்னே புகைப்படத்தை வெளியிட சொன்ன அஜித்.. இது தல பழக்கமே கிடையாது.. அப்புறம் ஏன்?

ajith-news

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வேணும்னே புகைப்படத்தை வெளியிட சொன்ன அஜித்.. இது தல பழக்கமே கிடையாது.. அப்புறம் ஏன்?

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தல அஜித் என்பவர் ஒரு ரகசிய மனிதராகவே செயல்பட்டு வருகிறார். திரைப்படங்களை தவிர வேறு எங்கேயுமே அவரை பார்க்க முடியாது. காலப்போக்கில் தல அஜித் ரசிகர்களும் அவருக்கு ஏற்றவாறு மாறி விட்டனர். இருந்தும் தல அஜித் பற்றி ஒரு துண்டு செய்தி கிடைத்தாலும் அதை தலைப்புச் செய்தியாக மாற்றிவிடும் அனைத்து வல்லமையும் தல ரசிகர்களிடம் உண்டு.

அந்த வகையில் சமீபத்தில் தல அஜித்துக்கு வலிமை படத்தின் படப்பிடிப்பில் சிறிது காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளிப் போனது. இதனை அறிந்த தல ரசிகர்கள் அஜித் காயத்திலிருந்து மீண்டு வரவேண்டும் என டுவிட்டரில் டிரண்ட் செய்து வந்தனர். அவரைத் தொடர்ந்து பல நடிகர் நடிகைகளும் தல அஜித் விரைவில் குணமடைய வேண்டுமென ட்வீட் போட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று தல அஜித் தனது உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொண்டார். அஜித் கலந்து கொண்ட விழாவிலிருந்து தல அஜித் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி தல ரசிகர்களை கொண்ட வைத்தனர். மேலும் தல அஜித் காயத்திலிருந்து மீண்டு விட்டார் எனவும் அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

பொதுவாகவே எந்த ஒரு விழா நடந்தாலும் அந்த புகைப்படம் கூட வெளிவராமல் தடுக்கும் அஜித் இந்த முறை தனது ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிடுவதற்கு தடை சொல்லவில்லை என அஜித்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் தல அஜித்தை நினைத்து வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்காக இந்த முறை தனது கொள்கையை முற்றிலும் விட்டுவிட்டாராம் தல அஜித்.

விரைவில் இதேபோல் இசை வெளியீட்டு விழா, ரசிகர்கள் சந்திப்பு என நடத்தினால் ரசிகர்கள் இன்னும் உற்சாகமாக இருப்பார்களே தல. பாத்து பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top