Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் சிவா கூட்டணியில் வீரம் போல் ஒரு படத்தை தயாரிக்கவேண்டும் பிரபல முன்னணி தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!
தல அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது அஜித் நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது, கடந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் சில காரணங்களால் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது.

ajith siva
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் மீண்டும் அஜித் சிவா கூட்டணியில் ஒரு படத்தை தயாரிக்க ஆசைப்படுகிறேன் என பிரபல தயாரிப்பாளர் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆம் தயாரிப்பாளர் தனஞ்செயன் தான் ட்விட்டரில் அஜித்-சிவா கூட்டணியில் படத்தை தயாரிக்க ஆசை என தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் தல அஜித்தின் வீரம் இந்த திரைப்படத்தை சிவா இயக்கியிருந்தார் பலமுறை இந்த படத்தை நான் பார்த்து ரசித்து உள்ளேன், அப்படி ஒரு காம்பினேஷன் இதுபோல் ஒரு கதை கிடைத்தால் லட்டு மாதிரி ஒரு படம் கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைக்கலாம் சாய்பாபா கருணை கிடைக்குமான்னு தெரியவில்லை பார்ப்போம் என ட்விட்டரில் கூறியுள்ளார்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு கமர்ஷியல் படம் தல-யின் 'வீரம்' with @directorsiva. பல முறை பார்த்து ரசித்தேன். அப்படி ஒரு காம்பினேஷன், அப்படி ஒரு சூப்பர் கதை கிடைச்சா, லட்டு மாதிரி ஒரு படம் கொடுத்து, ரசிகர்களை கொண்டாட வைக்கலாம். சாய் பாபா கருணை கிடைக்குமான்னு தெரியலை. பார்ப்போம் ??
— Dhananjayan BOFTA (@Dhananjayang) November 22, 2018
