Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-siruthai-siva

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிறுத்தை சிவா வீட்டில் நடந்த சோகம்.. இப்பவாச்சும் அஜித் வெளியே வருவாரா?

தமிழ் சினிமாவில் கார்த்திக் நடித்த சிறுத்தை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவா. சிறுத்தை படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் அவருக்கு சிறுத்தை சிவா என பெயர் வந்தது.

அதனைத் தொடர்ந்து தல அஜீத்துடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றினார்.

தற்போது ரஜினிகாந்துடன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த எனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென சிறுத்தை சிவாவின் தந்தை இறந்த செய்தி கோலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இறந்ததற்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

அதைவிட முக்கியமாக தல அஜித் சிறுத்தை சிவாவின் தந்தை இறப்புக்கு வருவாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தன்னை வளர்த்துவிட்டு அழகு பார்த்த எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு தல அஜித் வரவில்லை என்றும், கண்டிப்பாக சிறுத்தை சிவா தந்தை இறப்புக்கு வரமாட்டார் எனவும் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டிருக்கின்றன.

ajith-siruthai-siva-cinemapettai

ajith-siruthai-siva-cinemapettai

Continue Reading
To Top