Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலிவுட் சென்ற அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்..

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட இயக்குனர் விஷ்ணுவர்தன் பாலிவுட் பக்கம் சென்று இருக்கிறார்.

விஷ்ணுவர்தன் தெலுங்கில் வெளியாகிய அல்லாரி படத்தை கோலிவுட்டில் குறும்பு என்ற பெயரில் ரீமேக் செய்து அறிமுகமானார். தனது முதல் படம் ரீமேக்காக இருக்கக்கூடாது என நினைத்தாலும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். படத்திற்கு சரியான வரவேற்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவர் ஆர்யாவை வைத்தும் அறிந்தும் அறியாமலும் படத்தை இயக்கினார். பல கட்ட போராட்டத்திற்கு பிறகு அவரின் நண்பர் படத்தை தயாரித்தார். இந்த முயற்சிக்கு வெற்றியாக படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இவரின் திரை வாழ்வில் முக்கிய படமாக கருதப்படுவது அஜித்தை வைத்து மாஸ் ஹிட் படமான பில்லாவை இயக்கியது தான். அப்படத்தின் மூலம் விஷ்ணுவர்தன் மாஸ் இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். தொடர்ந்து, இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படம் பெரிய வெற்றியை பெற்றது. இதன்மூலம் இவரின் இயக்கத்திற்கும் ரசிகர்கள் அதிகரித்தனர்.

கடந்த 2015ம் ஆண்டிற்கு பிறகு விஷ்ணுவர்தன் படங்களை இயக்குவதில் இருந்து பெரிய ப்ரேக் எடுத்து இருந்தார். இந்நிலையில், சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன் படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிப்பட்டது. ஆனால், விஷ்ணுவர்தன் தனது ரீஎண்ட்ரியை கோலிவுட்டில் இல்லாமல் பாலிவுட்டில் ஆரம்பிக்கிறார்.

கார்கில் போரின் போது உயிர்த் துறந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக இருக்கும் படத்தை இயக்குகிறார். இதுகுறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் கரன் ஜோஹர் வெளியிட்டுள்ளார். விக்ரம் பத்ராவாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தீப் ஸ்ரீவத்சவா இந்த படத்திற்கான கதையை எழுதி இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top