‘தல’ என்னும் சொல் இன்று கோடிக்கணக்காண இளைஞர்களின் மந்திர சொல்லாய் இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இந்த மக்களின் அன்பை நான் நிச்சயம் பெறுவேன் என தன்னம்பிக்கையோடு 20 வருடங்கள் முன்பே அஜித் கூறியுள்ளார்.

அந்த பிளாஸ்பேக் சம்பவம்

1996 ஆம் வருடம் அது, கல்லூரி வாசல் என்ற தமிழ்ப்படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. முக்கிய கதாநாயகனாக நடிகர் பிரசாந்தும், இரண்டாம் கதாநாயகனாக நடிகர் அஜித்தும் நடித்துக் கொண்டிருந்தனர்.

வெளிப்புற படப்பிடிப்பு என்பதால் அதை காண பொதுமக்கள் அந்த இடத்தை சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். படமாக்க பட வேண்டிய காட்சி முடிந்ததும் பிரேக் விடப்பட்டது.

அதிகம் படித்தவை:  தளபதி விஜய் என்று சொல்லி தப்பிக்கமுடியாது,காயத்ரியை எச்சரித்த ரசிகர்கள்.

அப்போது அங்கு இருந்த மக்களில் 90 சதவீதம் பேர் நடிகர் பிரசாந்த் அருகில் சென்று புகைப்படம் எடுத்து கொண்டும், ஆட்டோகிராப் வாங்கிய வண்ணமுமாக இருந்தனர்.

மிக குறைந்த அளவிலான மக்களே அஜித் அருகில் சென்றனர். (அஜித் சினிமாவிற்கு வந்து அப்போது சில ஆண்டுகளே ஆயிருந்தது, பிரசாந்த் பல வெற்றி படங்கள் தந்த நாயகன் அப்போதே என்பது குறிப்பிடத்தக்கது)

அதிகம் படித்தவை:  கஷ்டம் வரும்போதுலாம் கூட இருந்தவர் அஜித்- பிரபல தயாரிப்பாளர் புகழாரம்

இந்த சம்பவம் நடக்கும் போது ஒரு துணை இயக்குனர் அஜித் அருகில் நின்று கொண்டிருந்தார் .அவர் அஜித்திடம் இதையெல்லாம் பார்த்து மனம் வருந்தாதீர்கள் என்று கூறி முடிப்பதற்குள் அவர் கண்களை பார்த்து அஜித் சொன்னாராம், எனக்கு என் உழைப்பில் மேல் அபார நம்பிக்கை உண்டு, “ஒருநாள் நிச்சயம் இந்த மக்கள் கூட்டத்தை என் பின்னால் வரவழைத்து காட்டுகிறேன் என்று உறுதியோடு சொன்னாராம், பின்பு அதை செய்தும் காட்டினார். இன்று தல அஜித் பின்னால் உள்ள ரசிகர் கூட்டம் நாடறிந்தது.