fbpx
Connect with us

மங்காத்தா பைக் சேசிங் சீன்ல அஜித் நடிக்கல, எல்லாமே டூப் தான்.. உண்மையை சொன்ன பத்திரிகையாளர்.. கொலவெறியில் தல ரசிகர்கள்

ajith-race-scene

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மங்காத்தா பைக் சேசிங் சீன்ல அஜித் நடிக்கல, எல்லாமே டூப் தான்.. உண்மையை சொன்ன பத்திரிகையாளர்.. கொலவெறியில் தல ரசிகர்கள்

தல அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா. வெறும் 30 கோடி பட்ஜெட்டில் தயார் செய்து கிட்டத்தட்ட 85 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

அதுமட்டுமில்லாமல் அதுவரை தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த தல அஜீத்துக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்து மீண்டும் சினிமா கேரியரில் தலைதூக்க மங்காத்தா படமும் ஒரு காரணம்.

மங்காத்தா படத்தில் தல அஜித் படம் முழுக்க பெரும்பாலும் கார் ஓட்டுவது, பைக் ஓட்டுவது போன்ற காட்சிகளிலேயே நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட காட்சியில் ரேஸ் பைக் ஓட்டுவது போன்ற சீன் ஒன்று படத்தில் உள்ளது.

அந்த காட்சி எடுக்கப்படும்போது அஜித் அந்த பைக்கை ஒட்டிய வீடியோ எல்லாம் சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. ஆனால் திடீரென பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனது யூடியூப் சேனலில் அந்த காட்சியில் அஜீத் மற்றும் வைபவ் நடிக்கவே இல்லை என கூறியுள்ளார்.

பல டூப் நடிகர்கள் தான் காட்சியை செய்து முடித்தார்களாம். அதே சமயத்தில் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் உண்மையாகவே அஜித் பைக் ஓட்டி அதைப்போல வைபவ் பொய் பேசி படத்திற்கு பிரமோஷன் செய்து விட்டார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனைக் கேள்விப்பட்ட தல ரசிகர்கள் செம கோபத்தில் உள்ளனர். அது மட்டுமல்லாமல் அவரது யூடியூப் பக்கத்திலேயே அவருக்கு மிரட்டல் விடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இது சம்பந்தமான செய்திகளை வெங்கட் பிரபு உடனடியாக தெரிவிப்பது நல்லது.

Continue Reading
To Top