அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷா, அனுஷ்கா என பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் அதில் சைலன்ட்டாக ஸ்கோர் செய்தவர் பேபி அனிகா. இதில் இவர் அஜித்தின் வளர்ப்பு மகளாக நடித்திருப்பார். இவர் மிருதன் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் மலையாளத்தில் மம்முட்டி, சினேகா நடிக்கும் படத்தில் அவர்களது பெண்ணாக நடித்து வருகிறாராம். பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் இவர் ஏற்கனவே மம்மூட்டி குழந்தையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..