Tamil Cinema News | சினிமா செய்திகள்
தீபாவளி பாதுகாப்பு பணி! களத்தில் இறங்கிய அஜித்தின் தக்க்ஷா டீம்
சென்னை ஏரோநாடிக் மாணவர்களுக்கு ஆலோசகராக அஜித் வந்ததில் இருந்து சாதனையும் வருகிறது. அஜித் தலைமையிலான ‘தக்க்ஷா’ குழு போன மாதம் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேண்டில் நடந்த யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் உலகளவில் 2வது இடத்தைப் பெற்று சாதனை புரிந்தது எல்லாரையும் ஆச்சர்யத்தில் நிகழ்த்தியது.
தற்போது அஜித்தின் ‘தக்க்ஷா குழு’ டீம் தீபாவளியை முன்னிட்டு சென்னை தி.நகரில் ட்ரோன் மூலம் கண்காணிக்க உள்ளனர். வரபோகும் தீபாவளியை முன்னிட்டு சென்னை டி.நகரில் உள்ள கடைகளுக்கு மக்கள் மிகவும் கூட்டம் கூட்டமாக செல்வார்கள். அப்பொழுது டி.நகரில் மக்கள் கூட்டத்தில் பாதுகாப்பாக சென்றுவர காவல் துறையினர் பணியில் இருப்பார்கள். இன்று சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தக்ஷா குழுவின் ட்ரோனை இன்று திறந்து வைத்தார்.

ajith-daksha
தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அனைவரும் சென்னையில் உள்ள டி.நகரில் பொருட்கள் வாங்க அதிக அளவில் சென்று வரும்போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க இந்த வான்வழி ட்ரோன் உதவியாக இருக்கும். சினிமாவை தாண்டி அஜித் வானுயரம் பறக்கிறார்.
