நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார். இவருக்கு போட்டியாக சக நடிகர்கல் இருந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.

ajith vivegam
ajith vivegam

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த ‘விவேகம்’ படத்திற்காக படக்குழுவினர் எந்த அளவு உழைத்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். அஜித் ரசிகர்களும் ‘விவேகம்’ படத்தை அமோகமாக வரவேற்றனர்.

கலவையான விமர்சனங்களைப் பெற்று படத்தின் வசூல் மூலம் வெற்றியைத் தக்கவைத்தனர். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ‘சிறுத்தை’ சிவா தான் இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Siva-and-ajith
Siva-and-ajith

அஜித் விவேகம் படத்திற்கு பிறகு முழு ஓய்வில் இருக்கின்றார். அடுத்தப்படத்தில் எப்படியும் அஜித் இளமை தோற்றத்தில் தான் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அஜித் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான விவேகம் திரைப்படம் ரசிகர்களால் வரவேற்கப்படாலும் பல கலவையான விமர்ச்சனங்களை சந்தித்தது அதனால் , தனது அடுத்த படத்தையும் விவேகம் இயக்குனர் சிவாவிற்கே கொடுத்துள்ளார். இது சிவா – அஜித் கூட்டணியில் உருவாகும் நான்காம் படமாகும்.

மேலும், அஜித் தன்னால் பாதிக்கப்பட்ட சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்திற்கே தனது அடுத்த படத்தை தந்திருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ajith

இந்த நிலையில் சிவாவும் அஜித்தின் அடுத்தப்படத்தின் வேலைகளில் இறங்க, இந்த காம்பினேஷனை மீண்டும் சத்யஜோதி நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது.

அதே நேரத்தில் பிரபல கட்சியின் சேனல் இப்படத்தின் தயாரிப்பில் தலையிட்டுள்ளதாம், அஜித்தின் முதல் கண்டிஷன் பேட்டி தரமாட்டேன் என்பது தானாம்.

ajith

சேனல் தற்போது ஓகே சொன்னாலும் படம் ரிலிஸாகும் தருணத்தில் அஜித்திற்கு ப்ரேஷர் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை என்று தெரிகின்றது.

அதோடு இந்த படத்துக்கு தனது வழக்கமான சம்பளத்தை வாங்காமல் குறைத்துக்கொண்டுள்ளார் என்கிறார்கள். இந்த தகவல் உண்மையாகும் எனில் மற்ற நடிகர்களுக்கு மத்தியில் அஜித் முன்னுதாரமாக கருதப்படுவார்.