மீண்டும் அதே கதையில் அஜித்தா? கண்ணீர் விடும் ரசிகர்கள்.. இயக்குனர் கூறிய அப்டேட்

அஜித் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. எப்போது அஜித் படம் திரைக்கு வரும், தியேட்டருக்கு சென்று விசில் அடித்தவாறு பார்க்கலாம் என ஒரு படையே காத்திருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் படம் எதுவும் வெளியாகவில்லை.

இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் படம் வெளியானது. அதன் பின்னர் அவருக்கு எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து முடித்துள்ள வலிமை படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

அதன்படி அஜித் மற்றும் வினோத் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள வலிமை படம் அடுத்தாண்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து அஜித் மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அஜித்தின் 61வது படம் இப்படித்தான் இருக்கும் என இயக்குனர் வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “அஜித்தின் அடுத்த படம், உலக அளவில் மக்கள் சந்திக்கும் சமூக பிரச்சனைகளைப் பேசும் படமாக இருக்கும். இப்படம் வலிமை படத்தை போன்று அல்லாமல், ஆக்ஷன் காட்சிகள் குறைவாகவும், வசனங்கள் அதிகமாகவும் இருக்கும்” என கூறியுள்ளார்.

இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் வெளியான நேர்க்கொண்ட பார்வை படத்தில் அஜித் சமூக பிரச்சனைகள் குறித்து பேசியிருப்பார். இதனை தொடர்ந்து அடுத்த படத்திலும் சமூக பிரச்சனைகளை பேச உள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்