சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார் அஜீத். இந்த படத்திற்காக அவர் முதல் முறையாக சிக்ஸ் பேக் வைத்துள்ளார். ஜிம்மில் மணிக்கணக்கில் ஒர்க் அவுட் செய்கிறார்.

இந்நிலையில் அவர் திருவான்மியூரில் ஹைடெக் ஜிம்முடன் கூடிய அரண்மனை போன்ற பெரிய வீட்டை கட்டி வருகிறாராம். அஜீத் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் வீடு கட்டும் பணியை ஷாலினி பார்த்து வருகிறாராம்.

வீடு கட்டும் பணி 60 சதவீதம் முடிந்துவிட்டதாம். முன்னதாக தன் வீட்டில் வேலை செய்யும் ஆட்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அவர்கள் பணிக்கு வந்து செல்ல வசதியாக போக்குவரத்திற்கும் ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத் விரைவில் புதுவீட்டில் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுவீடு பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டு வருகிறது.