எஸ் பி பாலசுப்பிரமணியத்துக்கு கடைசியாக அஞ்சலி செலுத்தவாவது அஜித் வருவாரா? ஏக்கத்தில் ரசிகர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ் பி பாலசுப்ரமணியம் இன்று காலமானார், அவருக்கு வயது 74.

கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேல் பாடல்களைப், 16 மொழிகளில் பாடியுள்ளார் எஸ் பி பாலசுப்ரமணியம். பல சாதனைகளைப் படைத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

சினிமாவில் தல அஜித்தை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கே உண்டு. இந்த நிலையில் இரங்கல் தெரிவிப்பதற்காக தல அஜித் வருவாரா என்று கோலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இது மட்டுமில்லாமல் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர், ஏனென்றால் தன்னுடைய விசுவாசத்தை காண்பிப்பதற்கு கண்டிப்பாக தல அஜித் வருவார் என்று ரசிகர்கள் ஒருபுறம் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

எஸ் பி பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தொலை பேசியில் மட்டும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக தெரிகிறது.

தற்போது இவர் மறைவிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினால் மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

பல பிரபலங்கள் வரும் சூழ்நிலையில் அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது, ரசிகர்களுக்கும் அனுமதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.