Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்துக்கு இந்த படம் ஹிட் ஆகலனா எப்பவோ சினிமாவை விட்டு ஒதுங்கி இருப்பாராம்.. நல்ல வேளை அப்படி நடக்கல
தல அஜித்தின் படங்கள் தற்போது வேண்டுமானால் தொடர்ந்து வெற்றிப்படங்களாக மாறலாம். ஆனால் அவரும் ஒரு காலத்தில் வெற்றி என்ற ஒன்றை சுவைக்க முடியாமல் தடுமாறினார் என்பது அனைவரும் அறிந்ததே.
அதுவும் 2000 முதல் 2010 வரை தல அஜித்துக்கு மிகவும் சோதனையான ஆண்டாக அமைந்தது. வரிசையாக அவர் நடித்த ஜி, ஆழ்வார், ஜனா, ஏகன் போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தன.
அந்த சமயத்தில் அஜித் சினிமாவை விட்டு ஒதுங்கி விடலாம் என்று கூட எண்ணி இருந்தாராம். கடைசியாக இந்த படத்தை மட்டும் பண்ணலாம், இது ஒர்க் அவுட்டானால் மேலும் சினிமாவில் இருக்கலாம், இல்லை என்றால் நடிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம் என முடிவு எடுத்திருந்தாராம்.
அப்படி அவர் நடித்த படம்தான் மங்காத்தா. பில்லா படம் கொடுத்த உற்சாகத்தில் அதற்கடுத்து தோல்வி படங்கள் வந்தாலும் மங்காத்தா படத்தை பெரிதும் நம்பியிருந்தார் தல அஜித். அஜித் மனதைப் போலவே அந்தப் படமும் பெரிய வெற்றியைப்பெற்று அதுவரை முதல் நாள் அதிகம் வசூல் செய்த படங்களில் சாதனைகள் எல்லாம் ஓரம் கட்டியது.
எல்லாருக்குமே சோதனைக் காலங்கள் உண்டு அதை சாதனைகளாக மாற்றுவது என்பது அவரவர் கையில்தான் உள்ளது என்பதை ஆணித்தரமாக நிரூபித்து உள்ளார் தல அஜித். தற்போது தல அஜித் சுமாரான படங்கள் நடித்தால் கூட வசூல் ரீதியாக எந்த பாதிப்பும் இருக்காது. அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்.
எண்ணம் போல் வாழ்க்கை!
