அஜித் படத்தில் நடித்தவர் பாபுராஜ். இவர் ஒரு மலையாள நடிகர். 2004-ம் ஆண்டு ஜனா படத்தில் அஜித்தோடு நடித்தவர். இவர் நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர்.

பல படங்களில் நடித்து வருவதோடு, 2 படங்களை இயக்கியும், 5 படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார் பாபுராஜ். கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக மலையாள சினிமாவில் முக்கியமான நடிகராக இருக்கும் பாபுராஜிக்கு 2 குழந்தைகள்.

பாபுராஜின் வீட்டுக்கு பக்கத்தில் உள்ளவர்களுடன் நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இரு வீட்டினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாகி, பாபுராஜை கடுமையாக தாக்கி உள்ளனர் பக்கத்துக்கு வீட்டினர்.

இதனால், காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.