அந்த தயாரிப்பாளருடன் மீண்டும் கூட்டணி வேண்டாம்.. ஒரேயடியாக விலகிய அஜித்

அஜித் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட தயாரிப்பாளருடன் 2 படங்கள் பணியாற்றி இருந்தாலும் இப்போதைக்கு மீண்டும் அவருடன் படம் பண்ண வேண்டாம் என்று முடிவெடுத்து வேறொரு தயாரிப்பாளருக்கு அடுத்த பட கால்ஷீட்டை கொடுத்து விட்டாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜீத்தை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர். அந்த வரிசையில் டாப் தயாரிப்பு நிறுவனங்களாக இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், லைகா நிறுவனம் போன்றவையும் அடங்கும்.

ஆனால் தல அஜித் பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் சிக்காமல் தனிப்பட்ட தயாரிப்பாளருக்கு மட்டும் பட வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சத்யஜோதி பிலிம்ஸ், ஏ எம் ரத்னம் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் அஜித்தை வைத்து நல்ல லாபம் பார்த்தனர்.

அதேபோல்தான் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்தார். இதில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வலிமை படம் இன்னும் படப்பிடிப்புகள் முடியாமல் ரிலீஸ் தள்ளி கொண்டே செல்கிறது.

இதற்கிடையில் போனிகபூர் மீண்டும் அஜீத்தை வைத்து படம் தயாரிக்க முயற்சி செய்ததாக கூறுகின்றனர். ஆனால் தல அஜித் ஒரு தயாரிப்பாளருடன் தொடர்ந்து இரண்டு படம் தான் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம். இதன் காரணமாக தன்னுடைய அடுத்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் என்பவருக்கு கொடுத்து விட்டாராம்.

இவர்தான் வலிமை படத்தின் தமிழ்நாட்டு உரிமையை வாங்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல். அதுமட்டுமில்லாமல் ஒரே தயாரிப்பாளரின் கைவசம் சிக்கி விடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக உள்ளாராம் தல அஜித்.

valimai-cinemapettai
valimai-cinemapettai