Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2003-க்கு பின் பல தோல்விகள் கொடுத்தாலும், ரசிகர்கள் கொண்டாடும் அஜித்.. காரணம் கேட்டு மிரளும் கோலிவுட்!

நடிகர் நடிகைகள் சினிமாவில் தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்தால் அவர்களது கேரியர் காலியாகி விடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தல இந்த வழக்கத்திற்கு விதிவிலக்காய் திகழ்ந்து வருகிறார்.

அதாவது, தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் மட்டுமே முன்னேறி உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். மேலும் தற்போதெல்லாம் தல நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் பாக்ஸ் ஆபீசை குவித்து சாதனை புரிந்து வருகிறது.

இந்த நிலையில் தல நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை கொடுத்தாலும் அவரது கெரியர் பாதிக்கப்படாமல் இருப்பது ஏன் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது தல அஜித் இரண்டாயிரத்துக்கு பின் சில தோல்வி படங்களை கொடுத்து இருந்தார். அதற்குப் பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் பிரேக்கும் எடுத்தார். இதனால் இனி அஜித் நடிக்கவே மாட்டார் என்று பல வதந்திகள்  கூட பரவின.

ஆனால் தலயோ கம்பீரமாக மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு மிக முக்கிய காரணம் தோல்வி படங்களை கொடுத்தால்கூட  தல அவருடைய இமேஜை பக்காவாக மெயின்டன் பண்ணியது தான் என்று  கூறப்படுகிறது.

மேலும் பல நடிகர்கள் தங்களுடைய ரசிகர் மன்றத்தை வைத்து அரசியல் செய்யும் இந்த காலத்தில், தன்னுடைய ரசிகர் மன்றத்தையே சுக்குநூறாக தகர்த்தவர் தான் தல. இதனால் ரசிகர்கள் பலரின் மத்தியில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல், தல அஜித் தன்னுடைய  பேர்சனல் லைஃப்- ஐயும், வேலையையும், அவருக்குப் பிடித்தமான விஷயங்களை செய்வதையும்  சூப்பராக பேலன்ஸ் செய்து வருகிறார்.

எனவேதான், தல பல தோல்விகளை சந்தித்தும் கூட தற்போது விடிவெள்ளியாய் தமிழ் சினிமாவில் உலாவிக் கொண்டிருப்பதோடு அவரது ரசிகர்களால் பெருமளவு கொண்டாடப்படுகிறார் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

valiami-ajithkumar

Continue Reading
To Top