சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

லைக்கா-வுக்கு Phone போட்ட அஜித்.. படமே வேண்டாம் கிளம்புங்க, ரிலீஸில் தொடரும் சிக்கல்

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதாக வந்த அறிவிப்பினால் அஜித் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அறிவிப்பு மட்டும் தான் வெளியானதே தவிர, அதற்க்கு பின் எந்த சத்தமும் இல்லை.

இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு டீசராவது வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை. உண்மையை சொல்லப்போனால், “எங்களுக்கு படமே வேண்டாம் கிளம்புங்கள்” என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். இருப்பினும் விடாமுயற்சி எப்போது வெளியாகும் என்ற கேள்வி ஒரு சிலரிடமிருந்து அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கிறது..

லைக்கா-வுக்கு phone போட்ட அஜித்

ஆரம்பத்திலிருந்தே இழுபறியாக இருந்த விடாமுயற்சி, தற்போது பல இழுபறிக்கு பிறகு ஒருவழியாக இப்படத்தின் படப்பிடிப்பு முடிவிற்கு வந்துள்ளது. இருப்பினும் விடாமுயற்சி எப்போது வெளியாகும் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

இந்த வருடத்துக்குள், கிறிஸ்துமஸ்-க்கு வெளியாகும் என்று அர்ஜுன் சொன்னார். ஆனால் வேறு எந்த அப்டேட்-ம் இல்லை. பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே ஆகவேண்டும் என்று, அஜித் நினைக்கிறார். ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குட் பேட் அக்லி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகுமா இல்லை விடாமுயற்சி வெளியாகுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், அஜித் தற்போது லைகா நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. விடாமுயற்சி படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம் என்பதை பற்றி அஜித் லைக்காவிடம் பேசியிருப்பதாகவும், சீக்கிரம் விடாமுயற்சிக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

- Advertisement -

Trending News