அஜித்தின் மாஸ் தமிழகத்தில் எப்படி என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஆனால், அஜித் கார் ரேஸிஸ் கவனம் செலுத்தி சினிமாவை சில காலம் மறந்தார். அந்த நேரத்தில் தான் தமிழ் சினிமாவிற்கு என ஒரு மிகப்பெரிய மார்க்கெட் கேரளாவில் உருவாகியது, இதை புரிந்துக்கொண்ட விஜய், சூர்யா, விக்ரம் எல்லாம் கேரளா பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தனர்.

அஜித் சுதாரித்துக்கொண்டு வரும் போது விஜய்யின் மார்க்கெட் கேரளாவில் வேறு லெவலில் உள்ளது, ஆனால், சமீப காலமாக மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என அஜித் படங்கள் தொடர்ந்து கேரளாவில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

அதன் காரணமாகவே விவேகம் படத்தை ரூ 4.5 கோடி கொடுத்து கேரளாவில் வாங்கியுள்ளனர், இந்நிலையில் அஜித்தின் ஆரம்பம் படமே கேரளாவில் இதுவரை அதிகம் வசூல் செய்த படம் அவர் திரைப்பயணத்தில்.

Vivegam-Mersalஇப்படம் அங்கு ரூ 6 கோடி வரை வசூல் செய்துள்ளது, விஜய் கேரளாவில் 4 படங்களுக்கு மேல் ரூ 10 கோடி வசூலை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ 10 கோடி கிளப்பில் விவேகம் இணையுமா? பார்ப்போம்.