வெள்ளை குதிரை மாதிரி புது ரேஸ் கார் வாங்கிய அஜித்.. ஷோரூமில் வெளியான தல போட்டோ

Ajith Bought New Car: அஜித்தை பொருத்தவரை ரெண்டு விஷயத்துக்கு மட்டும் தான் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதில் ஒன்று குடும்பம் இன்னொன்று அவருக்கு பிடித்தமான கார் ரேசிங். எப்பவாவது நேரம் கிடைக்கும் பொழுது ரசிகர்களுக்காக ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அப்படித்தான் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்த துணிவு படுத்திருக்கு பிறகு இப்பொழுது வரை ஒரு படமும் வெளிவரவில்லை.

ஆனால் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் ஆகப்போகிறது.

அஜித் வாங்கிய போர்ஷே GT3 கார்

ஆனாலும் இதற்கு இடையில் அவ்வப்போது பைக்கில் உலகத்தை சுற்றி கொண்டும் வருகிறார். அதாவது ஆசைக்கும் அந்தஸ்துக்கும் நடுவில் சந்தோஷமாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். என்ன தான் சினிமாவில் நடித்து முன்னணி நடிகராக இருந்தாலும் தன்னுடைய ஆசையும் அவ்வப்போது நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஏற்ப பைக் ரேஸ் கார் ரேஸ் மீது அதிக ஆர்வத்தை காட்டி வருகிறார்.

ajith new car
ajith new car

அப்படித்தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் துபாயில் 9 போடி மதிப்பில்லான ஃபெராரி கார் வாங்கினார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. ஏற்கனவே இவரிடம் 34 கோடி மதிப்பில்லான லம்போர்கினி கார் வைத்திருக்கிறார். ஏனென்றால் பைக் மட்டும் இல்லாமல் ஸ்போர்ட்ஸ் கார்கள் மீதும் அதிக ஆசை உண்டு. அதனால்யே போற இடத்தில் இவருக்கு ஒரு கார் பிடித்து விட்டால் உடனே வாங்கி விடுகிறார்.

Ajith Porsche car
Ajith Porsche car

அந்த வகையில் இப்பொழுது Porsche GT3 RS கார் வாங்கியிருக்கிறார். இந்த காரின் விலை 3.5 கோடி மட்டுமே. ஆனாலும் இந்த கார் மீது ஆசைப்பட்டால் உடனே அதை பார்த்து வாங்கி விடுகிறார். இந்த புது காரை அஜித் பார்வையிட்ட போது எடுத்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார் இஷ்டப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிறார் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News