Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட பிரபல திரையரங்கம்.!
அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பிரபல திரையரங்கம் சிறப்பு வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் அஜித்தின் முதல் எண்ட்ரி கோலிவுட்டில் இல்லை. ‘பிரேம புஸ்தகம்’ எனும் தெலுங்குப் படத்தில் தான் ஹீரோவானார். அதன்பின், பட வாய்ப்புக்களை தேடிக்கொண்டே விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இதை தொடர்ந்து, அவருக்கு அறிமுகமான சுரேஷ் சந்திரா கொடுத்த வாய்ப்பால் அமராவதி படத்தின் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதில் இருக்கும் ஒரு சுவாரசியம் என்றால் முதல் பட வாய்ப்பை வாங்கி தந்த சுரேஷ் சந்திரா தான் தற்போது அவருக்கு மேனேஜராக இருந்து வருகிறார்.
சினிமா நிகழ்ச்சிகளை அறவே ஒதுக்குபவர், நடிகர் சங்கம் போராடும் சமூக போராட்டங்களில் கூட கலந்து கொள்வதில்லை, அரசியல் பேசியதற்காவே ரசிகர் மன்றங்களை கலைத்தவர், எப்போதும் தொடர்பு கொள்ள கூடிய தூரத்தில் இல்லாதவர் எனப் பல விமர்சனங்கள் அஜித் மீது வைக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அவருக்கு ரசிகர்கள் வளர்ச்சி என்பது அசூர வேகமாக தான் இருக்கிறது. ஏன் அவரின் ரசிகராக இருக்கிறார் என கேள்வி கேட்டால், அஜித்தின் தன்னம்பிக்கை பிடிக்கும், யாரின் உதவியும் இல்லாமல் தல அந்தஸ்த்தை பெற்றவர், புகழுக்கு மயங்காதவர் என அடுக்கிக் கொண்டே செல்வர். அதிலும், அஜித்திடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் திரையில் பார்த்தாலே போதும் என்ற மனநிலையில் தான் அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவரின் பிறந்தநாளை தங்கள் வீட்டு விழாவாகவே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த வருட பிறந்தநாள் தான் காலை முதல் கலை கட்டி இருக்கிறது. பிரபலங்கள், ரசிகர்கள் என வரிசையாக வாழ்த்தை தெரிவித்து விட்டனர்.
இதேப்போல், ரோகிணி சில்வர் ஸ்க்ரீன்ஸ் திரையரங்கம் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு செய்யும் விதத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. தற்போது இந்த வீடியோ பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
