அஜீத்குமார், நயன்தாரா, நமீதா, பிரபு, ரகுமான், ஆதித்யா, சந்தானம் நடிப்பில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் யுவன் சங்கர்ராஜா இசையில் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஆனந்தா பிக்சர்ஸ் சர்க்யூட் மற்றும் ஐங்கரன் இண்டர்நேஷனல்.

பிரபலமான கடத்தல்காரன் பில்லா. கொலை, கொள்ளை, ஆயுதக் கடத்தல், அவனுக்கு அத்துப்படி. அவனைப் பிடிக்க போலிஸ் வலை விரிக்கும் போதெல்லாம் புத்திசாலித்தனமாக தப்பி விடுகிறான்.

ஒரு கட்டத்தில் அவனைப் போலிஸ் பிடிக்கப் போகும்போது மோதல் நடக்கிறது. பில்லா இறக்கிறான். ஆனால் அதை மறைத்துவிட்டு டிஎஸ்பி பில்லாவின் பின்னணியைக் கண்டுபிடித்து அவர்களின் ஆணிவேரை அழிக்க நினைக்கிறார்.

அதற்கு பிக்பாக்கெட்காரன் வேலுவை அவர்கள் கூட்டத்தில் பில்லாவாக நடிக்க வைக்கிறார்.பில்லாவின் பின்னணி பற்றிய தகவல்கள் தெரியும்போது டிஎஸ்பி சுட்டுக் கொல்லப்படுகிறார்.

பிறகுதான் தெரிகிறது போலிஸ் கூட்டத்திலேயே பில்லாவின் பின்னணி ஆட்கள் இருப்பது. பில்லாவை இயக்கும் ஜெகதீஷ்தான்… உயர் போலிஸ் அதிகாரி கோகுல்நாத் என்பது தெரிகிறது வேலுவுக்கு.

ஆனால் வேலுவைக் கைது செய்து பில்லா என்று நம்புகிறது போலிஸ். வேலு மீள்வதும் பில்லாவின் பின்னணியில் இருக்கும் ஜெகதீஷ் வெளிக்கொண்டு வரப்பட்டு மாள்வதும்தான் க்ளைமாக்ஸ்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஏதாவது ஒரு படம் வசூலில் ட்ரெண்ட் செட் படைக்கும். அப்படித்தான் சிவாஜி, தசவதாரம் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்து சென்றது.

அந்த வகையில் அஜித் நடித்த பில்லா அவருக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் ஒரு மைல் கல்லாக அமைந்தது, ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்ட தமிழ் படம் என்று அப்போதே கூறப்பட்டது.billa ajith stills

பில்லா படத்தை முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர், இதையே தான் பில்லா தயாரிப்பாளர்கள் விளம்பரமாக அப்போது பயன்படுத்தினர்.

இதன் மூலம் இரண்டு நாளில் ரூ. 10 கோடி வரை இப்படம் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

என்ன தான் அஜித்தின் படத்திற்கு தற்போது பெரிய ஓப்பனிங் இருந்தாலும், பில்லா படம் தான் அவரின் மாஸ் திரைப்பயணத்திற்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.