fbpx
Connect with us

பிரம்மிக்க வைக்கும் அஜித்தின் திரையுலக வரலாறு இதோ உங்களுக்காக.!

News / செய்திகள்

பிரம்மிக்க வைக்கும் அஜித்தின் திரையுலக வரலாறு இதோ உங்களுக்காக.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் மற்றொரு பிரபல நடிகருடன் இணைந்து நடித்தாலே அது வரலாறு தான். இந்த வகையில் தல அஜித் பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து வரலாற்றை படைத்துள்ளார்.

அவர் எந்தெந்த படங்களில் நடித்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

பிரம்மிக்க வைக்கும் அஜித்தின் திரையுலக வரலாறு

பாசமலர்கள் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் அரவிந் சாமியுடன் இணைத்து நடித்திருப்பார்.

தமிழ் சினிமாவையே ஆளும் இரண்டு நடிகர்கள் அஜித், விஜய் தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் ராஜாவின் பார்வையிலே.

ஒரு காலத்தில் அஜித் விஜய்யை விட பிரசாந்த் உச்சத்தில் இருந்தார், அப்போது பிரசாந்த் உடன் அஜித் இணைந்து நடித்த படம் தான் கல்லூரி வாசல்.

அஜித் வளர்ந்து வந்த நேரத்தில் சத்யராஜுடன் இணைந்து நடித்த படம் பகைவன்.

விக்ரம் கேட்டுக்கொண்டதாலும், தனது நண்பர் கார்த்திக் படம் என்பதாலும் ஒரு கெஸ்ட் ரோலில் அஜித் நடித்த படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.
அஜித், பார்த்திபன் இருவருமே மாறி மாறி கெஸ்ட் ரோலில் நடித்து கொண்ட படங்கள் நீ வருவாயென, உன்னை கொடு என்னை தருவேன் என்ற படங்கள்.

பாலிவுட்டிற்கு நிகரான படம் என்றால் அது கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் தான் இந்த படத்தில் மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு என பல நட்சத்திரங்களுடன் அஜித் இணைந்து நடித்திருப்பார்.

அஜித்தின் திரைப்பயணத்தில் செம பூஸ்ட் கொடுத்த படம் என்றால் அது தீனா தான் இந்த படத்தில் அஜித் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடித்தார்.

அஜித் நடித்த ஒரே பாலிவுட் படம் என்றால் அது அசோகா தான் இந்த படத்தில் பாட்ஷா ஷாருக்கானுக்கு வில்லனாக அஜித் நடித்திருந்தார்.

பரமசிவன், ஏகன் இந்த இரண்டு படங்களிலும் அஜித் மலையாள நடிகர் ஜெயராமுடன் நடித்திருந்தார்.

அஜித்தின் நீண்ட நாள் ஆசை ராஜ்கிரணுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான். இந்த ஆசை நிறைவேறியது கிரீடம் படத்தில் தான்.

அஜித்தின் பேவரைட் நடிகர்களில் பிரபும் ஒருவர், இவருடன் இணைந்து நடித்த படம் பில்லா.

ஆரம்பம் படத்தின் மூலமாக வளர்ந்து வரும் நடிகரான ஆர்யாவிற்கு வாய்ப்பளித்து அவருக்கு கை கொடுத்தவர் அஜித்.

மங்காத்தா அஜித்தின் 50வது படம், ஆனால், கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் அர்ஜுன், வைபவ் என பல நட்சத்திரங்களுடன் இப்படத்தில் இணைந்து நடித்திருப்பார்.

வளர்ந்து வரும் நடிகர் விதார்த்துடன் அஜித் இணைந்து நடித்த படம் தான் வீரம்.

என்னை அறிந்தால் படத்தில் தனக்கு ஒரு ப்ரேக் வேண்டுமென்று போராடி வந்த அருண் விஜய்க்கு தன் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தவர் அஜித், அதன் பிறகு அருண் விஜய் மார்க்கெட் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பிரபலங்களுடன் இணைந்து நடித்து தனது திறமையை வெளிக்காட்டியவர் தல அஜித்.

இதனால் தானோ இவரது ரசிகர்கள் தல என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என கூறுகிறீர்கள் போல.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top