Ajith_Varalaru

தல அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சந்தோஷமான செய்தி என்னவென்றால் அஜித்தின் 59வது படத்தை பற்றிய தகவல். இயக்குனர் சிவா மற்றும் அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியிடப்படவுள்ளது. அதற்குப் பின்னர் அஜித் தனது 59வது படத்தை பிப்ரவரி மாதம்தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனர் வினோத் இப்படத்தை இயக்குகிறார். அவரின் கதை அஜித்துக்கு மிகவும் பிடித்துள்ளதாம். தொடர்ச்சியாக நாலு படங்களை இயக்குனர் சிவாவுக்கு கொடுத்துள்ளார் நமது தல அஜித். இப்பொழுது ரசிகர்களுக்கும் ஒரு மாற்றம் தெரியா வேண்டும் அதனால் இந்த முறை மாற்றி உள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளார் இப்படத்தின் படப்பிடிப்பு 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட இருக்கிறது.

அதிகம் படித்தவை:  எங்க குல தங்கம், எங்க தல சிங்கம் தல அஜித் பாடல் யாரு படத்தில் தெரியுமா.!

தல 59 படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இணைவது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. முன்னதாக பவித்ரா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,வரலாறு போன்ற படங்களில் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  விஸ்வாசம் பாடல் வரியை வெளியிட்ட பாடலாசிரியர்.! செம்ம மாஸ் வரிகள் இதோ.!

இப்பொழுது இவர்கள் மீண்டும் இணைவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் 2019 தீபாவளியன்று வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.