சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `விவேகம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் ரிலீசுக்காக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுவான பார்வையாளர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், `விவேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் அஜித் குறித்த தனது கருத்துக்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தொடக்கம் முதலே `விவேகம்’ படம் குறித்த தகவல்கள் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது ஒருசில தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் ஓபராய் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று அஜித் குறித்து அவர் தெரிவி்த்ததாவது,

“அஜித் அண்ணா மிகவும் பணிவான மனிதன், மற்றவர்களுக்கு மதிப்பளிப்பதில் அவர் முழுமையான மாணிக்கம், சென்னையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சுகமாக இருப்பதை உணர்கிறேன். உங்களது அன்புக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘விவேகம்’ படத்தின் தலைப்பு, போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசரை தமிழ் தல பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.