Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் ரசிகரை கை நீட்டி பேசவோ மிரட்டவோ உங்களுக்கு உரிமை இல்லை.! உச்சகட்ட கோவத்தில் அஜித்.!
அஜித் தற்பொழுது விவேகம் படத்தை தொடர்ந்து சிவாவின் இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் தொடங்கியது, படத்தில் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார், இவர் இதற்க்கு முன் பில்லா மற்றும் ஏகன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரோபோ ஷங்கர் நடித்து வருகிறார், அதுமட்டும் இல்லாமல் தம்பி ராமையாவும் நடிக்கிறார், படத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது இது அனைவருக்கும் தெரியும்.
விசுவாசம் படம் எப்பொழுது ஆரம்பிக்கும் என பல ரசிகர்கள் காத்திருந்தார்கள் இந்த நிலையில் ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு அங்கு ஷூட்டிங் நடைபெற்று வருவதை அறிந்த மதுரை தல ரசிகர்கள் தல அஜித்தை நேரில் சந்திக்க ஹைதராபாத் சென்றுள்ளார்கள் அங்கு பவுன்சர்கள் அஜித் ரசிகரை கை நீட்டி எதோ பேசியுள்ளார்கள்.
அதை பார்த்த அஜித் அந்த பவுன்சரை பார்த்து என் ரசிகர்களை கை நீட்டி பேசவும் மிரட்டவும் உங்களுக்கு உரிமை இல்லை என கூறியுள்ளார்கள் அவர்களிடம் அன்பாக சொல்லுங்கள் என கூறியுள்ளார் இதை கண்ட அஜித ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
