அஜித் அமைதியாக இருந்தாலும், அஜித் இதை செய்தார், அதை செய்தார், நடந்தார்,நின்னார், கையை ஆடினார், காலை ஆட்டினார் என்று அஜித் ரசிகர்களின் அலம்பல்கள் அதிகம். சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒன்றை தட்டி விட வேண்டியது, அப்புறம் மறுப்பு கொடுக்கும்படி அஜித்துக்கே தலைவலி தருவது.

அப்படி,சமீப காலமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கும், வறட்சியினால் துக்கம் தாளாது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்களுக்கும், அஜித், இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் சம்பளத்தை நஷ்டஈடு தரப்போவதாக, தந்ததாகவும் வாட்ஸ் அப்பில் செய்தி வந்தது.

இதை கண்ட இயக்குனர் மனோபாலா கூட பாராட்டினார். பின்னர், இது பொய் தகவல் என்று அஜித் மானேஜர் மறுப்பு தந்தவுடன், தன் பதிவை அழித்தார்.

இப்படி ஏற்படும் புரளியால், வதந்தியால் பெரிய இம்சை ஏற்பட்டுவிடுமோ என்று கோபமான அஜித், இந்த வதந்திகளுக்கு யார் காரணம் என்று தேடுங்கள். இன்னொருமுறை நான் மறுப்பு சொல்லும்படி நேரக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்டுள்ளாராம்.