fbpx
Connect with us

மலேசியாவில் மாபெரும் நட்சத்திரக் கலைவிழா.! அரை சம்மத மூடில் அஜீத்.! என்ன சொன்னார் தெரியுமா.!

News / செய்திகள்

மலேசியாவில் மாபெரும் நட்சத்திரக் கலைவிழா.! அரை சம்மத மூடில் அஜீத்.! என்ன சொன்னார் தெரியுமா.!

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள்.

Aarambam Ajith

தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

அஜித் பெரும்பாலும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார்.

விஷாலை இன்னும் தலைவராக ஏற்றுக் கொள்கிற மூட் அஜீத்திற்கோ, விஜய்க்கோ வந்து சேரவில்லை.

ajith vijay

இதற்கு முன் பலமுறை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், தன் கடன் பணி செய்து கிடப்பதே என்பதில் உறுதியாகவே இருக்கிறார் விஷால். அதில் ஒரு திருப்பணிதான் மலேசியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நட்சத்திர இரவு. அதாவது ஸ்டார் நைட்.

ஒவ்வொரு முறையும் உண்டியலோடு வரும் தமிழ்சினிமா நட்சத்திரங்களை, வேண்டும் வேண்டும் என்று நிரப்பி அனுப்புகிற மகத்தான கடமை மலேசிய சிங்கப்பூர் தமிழர்களுக்கும் இருக்கிறது. அது அலுத்துப் போகாதவரை நல்லது.

ajith

இந்த முறை இந்த ஸ்டார் நைட்டில் கலந்து கொள்ள வைப்பதற்காக அஜீத் விஜய் இருவரிடமும் பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார் விஷால். இதற்கு முன் எப்படியோ? இந்த முறை சற்றே பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வந்திருக்கிறதாம் அவர்களிடமிருந்து.

முக்கியமாக எந்த நிகழ்ச்சிக்கும் தலைகாட்டாத அஜீத், இந்த முறை “சொல்றேன்…” என்று ஒரு பதிலை கூறியிருப்பது பெரும் வியப்பாக கருதப்படுகிறது. அவரது சொல்லுக்காக நடிகர் சங்கத்தின் கட்டப்படாத செங்கற்கள் கூட வெயிட்டிங்… வெயிட்டிங்….

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top