`ஆழ்வார்’, `கிரீடம்’, `பில்லா’ ஆகிய படங்கள் அஜித் நடிப்பில் ஒரே வருடத்தில் (2007) வெளியானவை. அடுத்தடுத்த வருடங்களில் (2009, 2016 தவிர) வருடத்துக்கு ஒரு படம்தான்.

எனவே, அஜித் படத்தின் தலைப்பு, போஸ்டர், டீஸர், ட்ரெய்லர் என எது வந்தாலும் ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள். `வேதாளம்’, `விவேகம்’ இரண்டுக்குமிடையில் ஒரு வருட காலத்துக்கு அஜித்தின் எந்தப் படமும் வெளிவரவில்லை. இது ‘விவேகம்’ படத்துக்கான எக்ஸ்ட்ரா மைலேஜ் எனவும் சொல்லலாம்.

billa
billa

சாதாரணமாக, அஜித் படத்துக்காக உருவாகும் எதிர்பார்ப்பை இந்த இடைவெளி அதிகமாக்கியிருக்கிறது.

1980 ம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளிவந்து மாஸ் ஹிட்டடித்த திரைப்படம் பில்லா, சுமார் 27 வருடங்களுக்குப் பின் பில்லா திரைப்படம் மீண்டும் எடுக்கப் பட்டது. இதில் பில்லாவாக அஜீத் நடிக்க படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியிருந்தார்.

பழைய சரக்காக இருந்தாலும் கூட படம் நன்றாக ஓடி கல்லா கட்டியது, பில்லா படம் வெளிவந்து சுமார் 5 ஆண்டுகள் கழித்து அஜீத்தின் நடிப்பில் பில்லா 2 வெளிவந்தது. படத்தை சக்ரி டொலட்டி இயக்கியிருந்தார்.

 

அஜித்தின் பில்லா 2 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுதன்ஷு பாண்டே. இவர் தற்போது ரஜினியின் 2.0 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

billa ajith stills
billa

அண்மையில் இவர் பேட்டியில் அஜித் பற்றி பேசும்போது, பில்லா 2 படத்திற்கு பிறகு அஜித்தும் நானும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறோம்.

நாங்கள் எப்போது Racing பற்றி தான் அதிகமாக பேசுவோம், அவரும் அவருடைய Racing வீடியோக்களை நிறைய என்னிடம் காட்டியுள்ளார் என பேசியுள்ளார்.