Connect with us

Cinemapettai

பல்கேரியாவில் அஜித், அக்ஷரா ஹாசன் ஷூட்டிங்! பல்கேரியா பறந்தார் அக்ஷரா..

akshara-haasan-teams-up-with-ajith

Cinema News | சினிமா செய்திகள்

பல்கேரியாவில் அஜித், அக்ஷரா ஹாசன் ஷூட்டிங்! பல்கேரியா பறந்தார் அக்ஷரா..

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதுவரை ‘தல 57’ படத்தின் 60% காட்சிகள் படமாகியுள்ளது.

இதன் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் பல்கேரியாவில் தொடங்கியுள்ளது. மொத்தம் 55 நாட்கள் இதன் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது நாயகியான அக்ஷரா ஹாசன் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இன்று பல்கேரியா சென்றுள்ளார். மொத்தம் 30 நாட்கள் அவர் அங்கே தங்கியிருந்து நடிப்பார் என சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top