தமிழ் சினிமாவில் பிரமாண்ட ரசிகர்களின் கூட்டத்தை வைத்துக்கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித், இவர் சிவாவின் இயக்கத்தில் விவேகம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விசுவாசம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார், இந்த படத்தின் படபிடிப்பு இந்த மாதம் தொடங்க இருக்கிறது.

ajith
ajith

மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார், விசுவாசம் படத்திற்கு டி.இம்மான் இசையமைக்க இருக்கிறார், காமெடி ரோலில் கலக்க இருக்கிறார் யோகிபாபு,

மேலும் இந்த படம் முடிவடைந்ததும் அஜித் அடுத்ததாக யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்பது பல மில்லியன் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. இப்பொழுது இது குறித்த தகவல் ஓன்று வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

Ajith-Kumar

ஆம் அஜித்திடம் விவேகம் படத்தின் பொழுது சதுரங்க வேட்டை படத்தின் இயக்குனர் வினோத் கதை கூறியுள்ளார், தற்பொழுது அஜித் வினித்தின் கதைக்கு ஓகே சொல்லிவிட்டார் எனவும் இனி படத்தின் நடிகை தொழில் நுட்ப கலைஞர்கள் தேடுதல் வேட்டை தொடங்கிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.