மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் தற்போதே தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறார்கள். இணையத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பல ஹேஷ் டேகளை உருவாக்கி தற்போதே டிரென்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக நடிகர் அசோக் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில், ” ஒரு ஆம்பளக்கு கெத்தோ அழகோ நடக்கும் நடையில் மட்டும் இல்லை.. நடந்துகொள்ளும் முறையிலும் தான். அந்த வகையில் என்னை ஈர்த்தது உங்கள் குணம்தான்” என கூறியுள்ளார்.