fbpx
Connect with us

Cinemapettai

அஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவதாகத் தயாராகி வரும் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது. படத்தில் நயன்தாரா அஜித்தின் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் அஜித்- நயன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளைப் படக்குழுவினர் ஷீட் செய்துள்ளனர். இமான் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதாக படக்குழுவினர் கூறுகிறார்கள். மேலும், இந்த படத்தில் தம்பி ராமையா, போஸ் வெங்கட், யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் அஜித்துடன் நடிக்கின்றனர்.

இந்த கூட்டணியின் விவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. , விஸ்வாசம் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்க படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது. மார்ச் மாதத்திலேயே படப்பிடிப்புத் தொடங்கப்பட இருந்த நிலையில், தமிழ் சினிமா ஸ்ட்ரைக் காரணமாகத் தள்ளிப்போனது. ஸ்ட்ரைக் முடிந்த பிறகு சமீபத்தில் ஹைதராபாத்தில் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. படத்துக்காக ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் கிராமம் ஒன்றின் செட் மிகப்பெரிய அளவில் போடப்பட்டிருக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ள படக்குழு, விறுவிறுப்பாகப் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. படக்குழுவினர் ஒவ்வொருவருடனும் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்ட் அடித்தன.

ஏற்கனெவே வேதாளம் படத்தின் போது அஜித்துக்குக் காலில் காயம் ஏற்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தன்னால் நிறுத்தப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அஜித், காலில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு அந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தபின்னரே காலில் ஆபரேஷன் செய்துகொண்டார். அதேபோல், வேதாளம் ஷுட்டிங்கின்போது அஜித்துக்குத் தோளில் காயம் ஏற்பட்டது. ஆனால், அந்த காயத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை அவர் முடித்துக் கொடுத்தார். இந்தநிலையில், ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித்துக்குக் காலில் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனால், பதறிப் போன இயக்குநர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் ஷூட்டிங்கை நிறுத்தி விடலாம் என அஜித்திடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அஜித்தோ சினிமா ஸ்ட்ரைக்கால் ஷூட்டிங் தாமதமாகவே தொடங்கியிருக்கிறது. இப்போ என்னால நிக்க வேணாம். நான் நடிச்சுக் கொடுக்கிறேன். எந்த காரணத்தைக் கொண்டும் ஷூட்டிங்கை நிறுத்த வேண்டாம்னு கண்டிப்புடன் கூறியிருக்கிறார். இதனால், ஷூட்டிங்கைத் தொடர சிவா சம்மதித்திருக்கிறார். காயத்துடன் அஜித் நடித்துக் கொடுப்பது திரையுலகினரை நெகிழச் செய்தாலும், காயத்துடன் `தல’ நடித்து வருகிறாரே என அவரது ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top