நேர்கொண்ட பார்வை தொடர்ந்து அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டும் இயக்குனர் வினோத் உடன் என நாம் அறிந்த விஷயமே. அது ரிமேக், அடுத்தது வினோத்தின் ஒரிஜினல் கதை, திரைக்கதையில் தான் ரெடியாகிறது. அஜித் 60 படத்தையும் போனி கபூரின் பே வியூ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தான் தயாரிக்கின்றனர்.
நேர்கொண்டப்பார்வை 25 நாள் சமயத்தில் இப்படத்தின் அப்டேட் வரும் என எதிர்பார்த்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். எனினும் ஒருபுறம் இது போலீஸ் படம் என்ற கிசு கிசுவுடன் அஜித்தின் ஸ்லிம் போட்டோஸ் வெளியாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன் தான் வில்லன், படம் தமிழ் மட்டுமன்றி வேறு சில மொழிகளிலும் ரிலீஸ் என்றெல்லாம் சொல்லி வருகின்றனர் பலர்.
எனினும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாக வில்லை. இந்நிலையில் ரசிகர் ஒருவர் எடிட் செய்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நீங்க என்ன பாஸ் அப்டேட் தரது, நாங்க கொடுக்கிறோம் என்ற பாணியில் கலக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள் தரப்பு.
