தற்போது ஒட்டுமொத்த தல ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் விவேகம். படத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் படம் வேற லெவலில் இருக்கும் என்கின்றனர்.

இப்படத்தை முடித்துவிட்டு அஜித் யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் உலா வருகிறது.

அவர் யார் என்றால் .. அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என இரண்டு படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தான் அவரின் 58வது படத்தை இயக்கப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எழுத்தாளர் பால குமாரனுடன் இணைந்து விஷ்ணுவர்தன் சோழ ராஜ்ஜியம் பற்றிய ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கும் நிலையில் அந்த கதையில் அஜித் நடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதை நம்பும் வகையில் விஷ்ணு வரதன் தன் ட்விட்டர் பக்கத்தில் கவர் போட்டோவாக ராஜா ராஜா சோழன் படத்தை சமீபத்தில் வைத்துள்ளார்.