தல 58 இயக்கப்போவது சிவா கிடையாது.! இந்த இயக்குனர் தான்…! லேட்டஸ்ட் அப்டேட் - Cinemapettai
Connect with us

Cinemapettai

தல 58 இயக்கப்போவது சிவா கிடையாது.! இந்த இயக்குனர் தான்…! லேட்டஸ்ட் அப்டேட்

News | செய்திகள்

தல 58 இயக்கப்போவது சிவா கிடையாது.! இந்த இயக்குனர் தான்…! லேட்டஸ்ட் அப்டேட்

எதிர்மறை விமர்சனங்கள் ஒரு புறம் கொடிகட்டிப் பறந்தாலும், மறுபுறம் விவேகம் வசூல் சாதனை புரிந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்மறை விமர்சனங்கள் பெரு நடிகர்களின் முதல் வார வசூலைப் பெரும்பாலும் பாதிப்பதில்லை.

இது போன்ற முண்ணனி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது மட்டும் திரையரங்கிற்கு வரும் குடும்பங்கள், விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

ajith vivegam

ajith vivegam

ஆனால் விவேகம் இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவான முந்தைய இரு படங்களின் அளவு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

விவேகத்தில் சிவா கொடுத்த ஏமாற்றத்தின் வலியை அஜித் சீக்கிரம் மறக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. அடுத்து அஜித் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குநர் அதைத்தான் காட்டுகிறது.

vivegam

தனக்காக கதை தயார் செய்யாமல் நல்ல கதையாக தயார் செய்யும் இயக்குநர்களாகத் தேடி அப்படி அவர் டிக் அடித்திருப்பது புஷ்கர் காயத்ரியை. ஓரம்போ, வ குவார்ட்டர் கட்டிங், விக்ரம் வேதா என்று டார்க் ஃப்ளேவர் கதைகளாக சொல்லி அடிப்பவர்கள் இந்த ஜோடி.

ஜிஎஸ்டி விளைவால் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவது இனி சிரமம் என்று சொல்லப்பட்ட நிலையில்தான் விக்ரம் வேதா வெளியானது. டிக்கெட் விலை முக்கியம் இல்லை. நல்ல படமா என்பதுதான் முக்கியம் என்பதை நிரூபித்தது விக்ரம் வேதா.

vivegam

நமக்கு வந்த தகவல்படி இந்த இயக்குநர் ஜோடியை அழைத்து கதை கேட்டு ஓகே சொல்லியிருக்கிறாராம் அஜித். விரைவில் அறிவிப்பு முறையாக வரலாம். சிவா தயார் செய்யும் கதையை பொறுத்து அஜித் அவருடன் மீண்டும் இணையலாம். ஆனால் அது இந்த படத்துக்கு பின்பாகத்தான் இருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top