ajith

விவேகம் படம் அஜித் குமார் நடிப்பில் சிவா இயக்கிய இத்திரைப்படத்தில் விவேக் ஒபரோய், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஆகஸ்ட் 2 அன்று தொடங்கியது.

வெற்றி இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி எல். ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அஜித் குமாருடன் பில்லா, ஆரம்பம் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய அனு வர்த்தன் இப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ajith vivegam
ajith vivegam

காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில், கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்சரா ஹாசனும் கதாநாயகியாக நடித்தார்.

விவேகம் 2017 ஆகஸ்ட் 24 இல் உலகளவில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றிருப்பினும் திரையரங்கம் நிரம்பிய காட்சிகளை கொண்டு வணீக ரீதியாக ஒரு வெற்றி படமாகவே தெரிந்தது.

vivegam

பிரபல தமிழ் சினிமா விமர்சகர்களான Behindwoods இப்படத்திற்கு 2.25 மதிப்பெண் கொடுத்தது.யூடியூப் விமர்சனங்களில் தமிழ் டாக்கீஸ் மாறன் கொடுத்த விமர்சனம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

ஒரு விமர்சனம் என்பதை தாண்டி தனி மனித தாக்குதலாக பார்க்கப்பட்ட அந்த விமர்சனத்திற்கு பெருவாரியான அஜித் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கண்டனத்தை தெரிவித்தனர்.தற்பொழுது

vivegam

தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிவா தான் அஜித் 58 படத்தை இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அஜித் – சிவா கூட்டணி 4-வது முயைாக இணைய உள்ளது. இதே போல் விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

இந்த தகவலை சிவா உறுதிபடுத்தியுள்ளார். மேலும் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் வரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

ajith

வழக்கமாக படம் தொடங்கும் முன்பே சம்பளத்தை வாங்கிவிடும் அஜித்குமார். இந்த படத்திற்கான சம்பளத்தை படம் வெளியான பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டாராம்.

விவேகம் படம் பல எரியாக்களில் நஷ்டம் என்பதாலும், தயாரிப்பாளர் சில பண பிரச்சனைகளில் இருப்பதாலும் அஜித்குமார் இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் இது தான் அஜித்குமார் என்று கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.