Vivegam-Vedhalam
vivegam

அஜித்குமார் நடிப்பில் கடந்த 24ம் தேதி ‘விவேகம்’ படம் வெளியானது. ‘வேதாளம்’ படத்தை அடுத்து, இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்தப்படம் வெளியாகிறது என்பதால், ரிலீசுக்கு முன்பே ‘தல’ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

தமிழ்நாட்டில் மட்டும் இந்தப்படம் 770 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது.

காஜல் அகர்வால், அக்ஷராஹாஸன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் என நட்சத்திர அந்தஸ்து இருந்ததால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விவேகம் ஆரம்பத்திலேயே ரூ.120 கோடிக்கு வியாபாரம் ஆகியிருந்தது.

ajith vivegam
ajith vivegam

தமிழில் ஜேம்ஸ்பாண்டு வகையறா பாத்திரங்களில் நடிக்க அஜித்குமாரை விட்டால் வேறு ஆளில்லை என்ற ரீதியில் நேர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன. ‘தல’ ரசிகர்களை பெரிய அளவில் விவேகம் திருப்தி படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும்.

‘வீரம், வேதாளம், விவேகம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

vivegam

‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி நிறுவனமே இந்தப் புதிய படத்தையும் தயாரிக்க உள்ளதாம். அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்கிறார்கள்.

‘விவேகம்’ படம் கலவையான விமர்ச்சனத்தால்  அஜித் ரசிகர்களே, சிவா இயக்கத்தில், அஜித் மீண்டும் நடிப்பதை விரும்பவில்லை.

இந்த சூழ்நிலையில் ‘விவேகம்’ தோல்விக்காக மனம் தரள வேண்டாம் என சிவாவுக்கு ஆறுதல் சொன்ன அஜித், ‘வீரம், வேதாளம்’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்ததால் சிவாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Vivegam-Vedhalam
vivegam

இந்த முறை அஜித்திற்கு ‘சால்ட் அன்ட் பெப்பர்’ தோற்றம் இல்லாமல் அவரை மிகவும் இளமையாகக் காட்ட வேண்டும் என சிவா முடிவெடுத்திருக்கிறாராம்.

புதிய படத்தின் திரைக்கதையை மேலும் மெருகேற்ற தொடர்ந்து விவாதத்திலும் இருக்கிறார்களாம். விவேகம் படத்தின் விமர்சனத்தை கருத்தில் கொண்டு மிகச்சிறந்த படத்தைக் கொடுக்க படக்குழுவினர் மிகவும் கவனத்துடன் ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்து வருவதாகத் தகவல்.