சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தை குறுகிய காலத்தில் உருவாக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.

Ajith
Ajith

சில மாதங்களுக்கு முன்பு சிவா இயக்கத்தில் வெளிவந்த படம் விவேகம் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது ஆனால் பல கலவையான விமர்ச்சனங்களை சந்தித்தது.

அதனால் மீண்டும் அஜித் மற்றும் சிவா இணைகிறார்கள் கலவையான விமர்ச்சனங்களை மாற்றி அமைக்கவே இந்த முடிவு.

அஜித், சிவா இணையும் அடுத்தப் படத்தை விரைந்து முடித்து ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது படக்குழு.

Aarambam Ajith

வீரம், வேதாளம், விவேகம் என நடிகர் அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கி ஹாட்ரிக் கொடுத்தவர் இயக்குனர் சிவா.

இவர் இயக்கத்தில் மீண்டும் அஜித் ஒரு படம் நடிக்கப்போவதாகவும், அதனை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், விவேகம் படம் மாதிரி அதிக நாட்கள் எடுக்காமல், குறுகிய கால தயாரிப்பாக உருவாக்கும் நோக்கத்துடன் இந்தப் படத்தின் படப்படிப்பு திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ajith

தற்போது திரைக் கதையை இறுதி செய்யும் பணிகல் நடைப்பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நடிகர்களை தேர்வு செய்யும் பணி நடக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார்.

இந்தப் படத்தை விரைந்து முடித்து வரும் தீபாவளிக்கு வெளியிட்டாக வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு உள்ளது என்பது கொசுறு தகவல்.