வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

இதன் படப்பிடிப்பு ஜுலை 15-ல் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் முதலில் அஜித் மற்றும் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என தற்போது படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஷெட்யூல் ஜார்ஜியாவில் நடைபெறும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.